வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இன்று முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாதவர்களுக்கு அடுத்த மாதம் 10ம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிராம சேவகர் பிரிவிலோ, தேர்தல் அலுவலகத்திலோ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத் தளத்திலோ சென்று பெயரை இணைத்துக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜூலை 17 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான அழைப்பை விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் கிடைக்கும்.

எது எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.