தலைவர்கள் மீதான நம்பிக்கை இழக்கும் பட்சத்தில் அவர்களால் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கட்சியில் உள்ளவர்களை பற்றியே தலைவர்கள் சிந்திக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட விடயத்திற்காக அல்ல என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிலர் தன்னை கட்சியை விட்டு நீக்க தீர்மானித்தாலும் அதற்காக தான் பயப்பட போவதில்லை என கூறியுள்ளார்.
மேலும் இவர்களை விட மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஜாம்பவான்களை தான் கடந்த காலங்களில் எதிர்கொண்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவருக்கு சிறிதேனும் கவனம் இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.