வடக்கில் நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழப்பு

வட மாகாணத்தில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அதிலும் கிளிநொச்சி மாவட்டத்திலையே அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 13 பேரும், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 02 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மன்னாரில் 06 பேரும், வவுனியாவில் 05 பேரும், முல்லைத்தீவில் 08 பேரும் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்தில் 16 பேருமாக வடக்கில் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர் என்றும் வருடாந்தம் இந்த எண்ணிக்கை 700 முதல் 800 ஆக பதிவாவதாகவும் கூறியுள்ளனர்.

பண்டிகை காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு கூறியுள்ளது.