ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய ஏப்ரல் 18 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த சட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவை நீக்குவதற்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி, இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் இருப்பது கட்சியின் அரசியலமைப்பை மீறும் செயல் என்றும் சந்திரிக்கா குமாரதுங்க மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் மாத்திரமே கட்சியின் தலைவராக கடமையாற்ற அவர் தகுதியுடையவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு நிரந்தரத் தடை விதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மாவட்ட நீதிமன்றில் கோரியுள்ளார்.
இந்த மனுக்களை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான, ஏப்ரல் 18ஆம் திகதி வரை மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.