தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் மற்றும் சில எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த விரும்பம் தெரிவித்துள்ளன.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். அத்தோடு இதற்கான அறிவிப்பை ஜூலை 17ஆம் திகதி வெளியிட வேண்டும்.இதைத் தீர்மானிக்கும் வகையில், தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி பதவியேற்ற கவனத்தில் எடுத்துள்ளது. எவ்வாறாயினும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது இப்போது ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம், நாடாளுமன்றம் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் அதனை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரை அறிவிக்காததால், எந்த தேர்தல் முதலில் வரும் என்ற சஸ்பென்ஸ் மேலும் அதிகரித்துள்ளது.
இதேநேரம் தேர்தல் அமைப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஐக்கிய தேசியக் கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் நகர்வுகளை முன்னெடுத்துள்ளது. அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வுகளை சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி தலைமையில் வெள்ளிக்கிழமை சாகல ரத்நாயக்க, ரவி கருணாநாயக்க, அகில விராஜ் காரியவசம், பாலித ரங்கே பண்டார, கித்சிறி மஞ்சநாயக்க மற்றும் கிரிஷான் உள்ளிட்டவர்கள் கலந்துரையாடலில் எட்டுப்பட்டனர்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இரண்டு கட்சித் தலைவர்கள் இருமுனைப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஒன்று, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிவருகின்றது.
இந்த சூழலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்படுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ததமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் ஆராய்ந்து வருகின்றனர்.
எனினும் ஜனாதிபதி பதவி குறிப்பிட்ட காலத்திற்கு தக்கவைக்கப்படும் வரை சஜித் பிரேமதாச பிரதமராக இருக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் ஜனாதிபதி பதவி காலம் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என்றும் நாடாளுமன்ற வட்டங்களில் பொதுவாகப் பேசப்படுகின்றது.
எது எவ்வாறாயினும் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையிலான கசப்பு ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கூட ஜனாதிபதி, எதிர்க்கசிந்தித் தலைவரை கடுமையாக விமர்சித்திருந்தார்.
நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடந்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பல உறுப்பினர்கள் இருப்பதாகவும் ஆகவே இரு தலைவர்களும் முடிவுக்கு வந்தால் அதன் மூலம் நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
மேலும் தற்செயலாக தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றாலும் அதற்கான முந்தைய நகர்வு எதுவும் நிறைவேறவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முதலாவது முன்மொழிவுகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நிலையான அரசாங்கத்தின் மூலம் மட்டுமே, மேலும் பொருளாதார சீர்திருத்தங்கள் வெற்றிபெற முடியும் என்றும் தேயிலை ஏற்றுமதி மற்றும் சுற்றுலா வளர்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டாலும், முதலீடு பற்றாக்குறை இருப்பதனாகவும் சர்வதேச நாணய நிதியத்தின்பிரதிநிதிகளை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர்களுக்கான அழைப்பு கூட மிகவும் தாமதமாக கிடைத்தது என்றும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ கூறுகின்றானர். கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதியுடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பான கொள்கைகள் குறித்தும் ஜனாதிபதியின் இன நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பிலும் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச இருவரும் கேள்விகளை எழுப்பிய அதேநேரம் வேட்பாளர் குறித்து நிலைபாட்டை எடுக்க முன்னர் ஜனாதிபதி யின் கருத்துக்களை கோரியிருந்தனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், வாக்காளரின் யதார்த்த சிந்தனை வெளிப்படாது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தரப்பு எல்லையற்ற அதிகாரத்தைப் பெறலாம், அது நாட்டுக்கு நல்லது அல்ல. எனவே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் சமச்சீர் நாடாளுமன்றத்தை உருவாக்க முடியும் என பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கடந்த முறை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றோம். அத்தகைய அதிகாரம் வழங்கப்பட வேண்டுமா என்பதை வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும். முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் அது நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவைப் பொறுத்தவரை, எந்தத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பதில் முறையான நிலைப்பாடு எதுவும் இல்லை என்றும் இந்த விடயம் குறித்து மேலும் ஆய்வு செய்து கருத்துக்களை வெளியிடுவோம் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கூட்டணியை உருவாக்குவது குறித்து உத்தர லங்கா சபை விவாதித்து வருகின்ற்து. இதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமை தாங்குவார் என கூறப்படுகின்றது.
இதற்காக பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்ற அனைத்து குழுக்களையும் அணியில் சேருமாறு வேண்டுகோள் விடுக்க அவர்கள் முடிவு செய்தனர், அதனால் அவர்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்ரமசிங்க போட்டியிட மாட்டார் என்ற தனது கருத்தை தொடர்ச்சியாக தெரிவித்து வரும் பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில , ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க என வஜிர அபேவர்தன மாத்திரமே கூறிவருவதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் கொள்கைகள் நவ தாராளமயமானவை என்றும் அவர்கள் அனைவரும் அரச சொத்துக்களை விற்பனை செய்வதில் குறியாக இருப்பதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
எந்தவொரு தேர்தலில் நடத்தப்பட்டாலும் பொதுஜன பெரமுன மோசமாகப் பாதிக்கப்படும் என கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வீரசுமண வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான சதித்திட்டம் என்ற கோட்டாபய ராஜபக்சவின் புத்தகத்தில் வீரவன்ச மற்றும் கம்மன்பில பற்றிய குறிப்புகள் முரண்பாடுகளை காட்டி நிற்கின்றன.
இதேநேரம் பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் நிமல் லான்சா போன்றவர்கள் பசிலின் முடிவுக்கு காத்திருப்பதாக கூறியுள்ளனர். எவ்வாறாயினும் ஜனாதிபதி விக்ரமசிங்க ஒரு பிரகடனத்தை வெளியிடும்வரை எந்தத் தேர்தல் முதலில் வரும் என்ற சஸ்பென்ஸ் தொடரும்.