வங்கி ஒப்பந்தப் படிவங்கள் சிங்கள மொழியில் வழங்கப்படாவிட்டால் அதில் கையொப்பமிடுவதை தவிர்க்க வேண்டும் என இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று முதல் ஆங்கில மொழியில் உள்ள கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தக கூட்டமைப்பின் உப தலைவர் சுசந்த லியனாராச்சி வலியுறுத்தியுள்ளார்.
ஏனெனில் இந்த ஒப்பந்தங்களில் பல அவற்றின் குறிப்பிட்ட தேவைகளை தெளிவாகக் குறிப்பிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிசம்பர் 15 ஆம் திகதி வரை வங்கிகளின் பரேட் உரிமைகளை நிறுத்தி வைப்பதற்கான அமைச்சரவை தீர்மானித்துள்ள நிலையில் மக்களின் சொத்துக்களை வங்கிகள் கையகப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.