கடந்த முறை எல்.பி.எல். தொடரில் விளையாடிய காலி டைட்டன்ஸ் அணி, புதிய உரிமையின் கீழ் LPL தொடரின் 5வது பருவத்தில் காலி மார்வெல்ஸ் என்ற பெயரில் விளையாடவுள்ளது.
“Galle Marvels” என பெயரிடப்பட்ட புதிதாக அறிவிக்கப்பட்ட Franchisee ஐ அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று ஷங்ரிலாவில் ஹோட்டலில் நடைபெற்றது.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட்டின் போட்டிக் குழுவின் தலைவர் சமந்தா டோடன்வெல, IPG குழுமத்தின் நிறுவனர் மற்றும் CEO அனில் மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வை “Galle Marvels” அணியின் புதிய உரிமையாளர்களான பிரேம் தக்கர், மாலவ் படேல், நீல் படேல் மற்றும் ஹிமான்ஷு படேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
லங்கா பிரீமியர் லீக்கின் “Galle Marvels” க்கான தீம் பாடலுடன் லோகோ மற்றும் உத்தியோகபூர்வ ஜெர்சியை வெளியிடும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் சகலதுறை வீரர் லான்ஸ் க்ளூசனர் தலைமைப் பயிற்சியாளராகவும் அணையின் வீரர்களின் ஒருவராக அலெக்ஸ் ஹேல்ஸும் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இதேநேரம் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் லங்கா T10 லீக்கில் விளையாடவுள்ள ‘மொறட்டு மார்வெல்ஸ்’ என பெயரிடப்பட்ட அணியும் அறிவிக்கப்பட்டது.
மொரட்டு மார்வெல்ஸ் அணிக்கு இலங்கையைச் சேர்ந்த மாஸ்டர் பிளாஸ்டர் சனத் ஜெயசூர்ய பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது.
இரு அணிகளுமான தீம் பாடலுக்கான வரிகளை இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க எழுதியிருந்தமை சிறப்பம்சமாகும்.
இந்த போட்டிகளுக்கு அப்பால் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பதற்கான தமது உறுதிப்பாட்டினை இரு அணிகளினதும் உரிமையாளர்கள் வெளிப்படுத்தினர்.