பலசரக்கு பொருட்களை மீள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வர்த்தமானி இடைநிறுத்தம் !

மீள் ஏற்றுமதிக்காக தெரிவு செய்யப்பட்ட வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கை உள்நாட்டு வாசனை பொருட்களின் அறுவடை வீழ்ச்சியடையும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மிளகு, ஏலக்காய், இஞ்சி, ஜாதிக்காய், மஞ்சள் மற்றும் சீரகம் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் இலங்கையில் அனுமதி வழங்கப்படும் கடந்த வாரம் நிதியமைச்சு அறிவித்தது.

இந்த மசாலாப் பொருட்களின் இறக்குமதியானது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்கும், 35% உள்ளூர் மதிப்பு கூட்டலுக்கும் உட்பட்டு நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் உரிய இறக்குமதி உரிமங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.