வடகொரிய ஜானாதிபதிக்கு கிம் ஜொங் உன்னுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கார் ஒன்றினை பரிசளித்துள்ளார்.
அவரது தனிப்பயன்பாட்டுக்காக குறித்த கார் கடந்த 18 ஆம் திகதி ரஷ்யாவில் பரிசளிக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கார் ரஷ்யாவின் தயாரிப்பிலான சொகுசு செடான் கார் என்றும் இதனையே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் வடகொரிய ஜானாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியும் சந்தித்துப் பேசியதில் இருந்து இரு நாடுகளும் நெருங்கிய உறவை ஏற்படுத்தி வருகின்றன.
இருப்பினும், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை வடகொரியாவுக்கு எதிரான ஐ.நா தடையை மீறுவதாக அமைந்துள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வாகனங்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்குவது அல்லது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் ஐ.நா.பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.