காசாவில் உணவு உதவிக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கி சூடு

காசாவில் உணவு உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரின் மேற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவை பெற்றுக்கொள்வதற்காக திரண்டு நின்ற போது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் போருக்கு மத்தியில் மனிதாபிமான உதவிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள வடக்கு காசாவில் ஒரு பாழடைந்த கரையோரப் பாதையில் மக்கள் தப்பி ஓடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதேநேரம் காசா பகுதியின் தெற்கில் உள்ள கான் யூனிஸுக்கு மேற்கே உள்ள பகுதிகளில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தற்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இந்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதம் மற்றும் சாத்தியமான உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.