காசாவின் இரண்டு குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 84 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் 50 சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்
தாக்குதல் இடம்பெற்ற 2 கட்டத்திலும் 170 பேர் தங்கியிருந்துள்ளனர்.
இதேநேரம் கான் யூனிஸ் மீதான வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது,
வாகனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் இறந்ததாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.