ஈஸ்டர் தாக்குதல்: கம்மன்பில வெளியிட்ட ரகசியம்

பொது மக்கள் பாதுகாப்புஅமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை உடனடியாக பதவி விலக்க வேண்டும், ஜனாதிபதி மக்களிடம் பகிரங்கமாகமன்னிப்பு கோர வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது சகாக்களைபாதுகாப்பதற்காக விசாரணை அறிக்கையை திரிபுபடுத்தி மூடி மறைக்கும் நோக்கில் உயர்பதவி நியமனங்களை வழங்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இன்று நடைபெற்றஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் கருத்து தெரிவித்தார்.

” 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகளின்இரு பக்கங்கள் காணாமல் போயுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த காணாமல் போனபக்கங்கள் தம்மிடம் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலதெரிவித்திருந்தார்.

இன்று அதை பகிரங்கமாகதெரிவிப்பதாக நேற்றைய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்தஅறிக்கைகளில் காணப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில்அவர் பகிரங்கப்படுத்தினார்

அது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,  டப்உதய கம்மன்பில2019 ஆம் ஆண்டு  ஜனாதிபதி  சிறிசேன ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனக் த சில்வா உள்ளிட்டவர்களை கொண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார்.

அந்த ஆணைக்குழுவின் அறிக்கை 2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபயராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்  ஒரு பகுதியை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகஅமையும் என கருதி பகிரங்கமாக வெளியிடாமல் விட்டனர். ஆனால் அந்த பகுதியும் கத்தோலிக்கபேரவைக்கு வழங்கப்பட்டது. நான் அந்த அறிக்கையைபற்றி இன்று பேசவில்லை. நான் கதைப்பது ரணில் விக்கிரமசிங்க விசாரணைக்காக நியமித்த குழுவின்அறிக்கை பற்றியே. இந்த இரு குழுக்களின் அறிக்கையையும் ஜனாதிபதியே மக்கள் மத்தியில்பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும்.

அது ஜனாதிபதியின் கடமை.ஆனால் ஜனாதிபதி அதனை செய்யாமல். தன் தரப்பு சார்ந்தோரை பாதுகாப்பதற்கான வேலைகளையேசெய்கின்றார். இந்த அறிக்கையைஜனாதிபதி மூடி மறைப்பதற்கு முனைகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல்சூத்திரதாரி என தெரிந்தும் ரவி செனவிரத்னவை தன் அருகில்  வைத்து கொண்டுள்ளார். அவரை பொது மக்கள் பாதுகாப்புஅமைச்சின் செயலாளராக நியமித்து அவரின் மேற்பார்வையின் கீழ் புதிய விசாரணைகளைமேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளசி.ஐ.டி பணிப்பாளர் நாயகமாக இருந்த ஷானி அபேசேகர, மற்றும் திசைக்காட்டியின் தேசிய பட்டியலில் முன்னர்  இடம் பெற்றிருந்த முஹம்மட் இப்ராஹிம் உள்ளிட்டோரை பாதுகாப்பதற்காகவும், ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான தகவல்களை திரிபு படுத்தி மூடி மறைக்கும் நோக்கிலும் இந்த நியமனம்வழங்கப்பட்டுள்ளது என சந்தேகம் எழுகின்றது.

இந்த அறிக்கையில் அரசஅதிகாரிகள்  17 பேர் மீது குற்றம்சுமத்தப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அவர்கள் அனைவரும் தம்  பக்க நியாயங்களை கூறுவதற்குகாரணங்களை வைத்திருப்பார்கள்.  தனக்குதேர்தலில் வெற்றி பெற உதவிய  அரசியல்நண்பர்களை பாதுகாப்பதற்கு இவற்றை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கிறார்.

ஜனாதிபதி ஆணைக்குழுஅறிக்கையில் குற்றவாளி என குறிப்பிடப்பட்டுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின்செயலாளர் ரவி செனவிரத்ன அந்த பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவர் அந்தபதவியில் இருக்கும் வரை ஈஸ்டர் குண்டு தாக்குதல் விசாரணை நீதியை எதிர்பார்க்கமுடியாது.

அதிகாரத்திற்கு வந்து முதல்மாதத்திலேயே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை, அரசியலமைப்பை மீறியமைக்காக ஜனாதிபதிபகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இதை ஜனாதிபதி செய்ய தவறினால்எதிர்வரும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்படும்.