பன்றிகளுக்கு பரவும் வைரஸ் நோய் காரணமாக, பன்றிகளை கொண்டு செல்வதற்கு, சுகாதார சான்றிதழை கட்டாயமாக்குவதற்கு கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆகவே பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது அந்தந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான கால்நடை வைத்தியரிடம் சான்றிதழைப் பெற்றுக் கொள்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்பெருக்க மற்றும் சுவாச அமைப்பு தொடர்பான வைரஸ் நோய் பன்றிகளிடையே பரவி வருகிற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல், வடமேல், வட மத்திய மாகாணங்கள் உட்பட பல பகுதிகளில் இவ்வாறு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பன்றிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பன்றிகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.
நோயினால் இறந்த பன்றிகளின் இறைச்சியை உண்பது ஆரோக்கியமற்றது என்பதால் அவற்றை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.