பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசும் என்றும் அறிவித்துள்ளது.
இதனால் அவ்வப்பொழுது கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அந்த எச்சரிக்கையை குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடல் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் சபரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.