33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இலங்கை நேரப்படி, நேற்று இரவு 11 மணியளவில் ஆரம்பமாகியது.
நேற்று முதல் ஆரம்பமாகிய 2024 ஆம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக ஆரம்ப விழா மைதானத்திற்குள் நடைபெறாமல் பிரான்ஸ் தலைநகரில் உள்ள செயின் ஆற்றில் நடத்தப்பட்டது.
100 படகுகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
இலங்கை சார்பில் நதீஷா தில்ஹானி, விரேன் நெத்தசிங்க, கங்கா செனவிரட்ன, கைய்ல் அபேசிங்க, தருஷி கருணாரட்ன, அருண தர்ஷன ஆகிய தடகள வீரர்கள் ஆறுபேர் பங்குபற்றுகின்றனர்.