டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார் பெஞ்சமின் நெதன்யாகு !!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்பை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதை அடுத்து நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

புளோரிடாவில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்தும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2017 முதல் 2021 வரை ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப், அமெரிக்க-இஸ்ரேல் உறவை ஒரு அனுமதி மற்றும் பரிவர்த்தனை முறையில் கையாண்டிருந்தார்.

இருப்பினும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பைடனின் வெற்றியை ஏற்றுக்கொண்ட பெஞ்சமின் நெதன்யாகு, ட்ரம்ப் மோசடி செய்ததாகக் கூறிய உறவை முறித்துக்கொண்டார்.