வேறு வாக்குச்சாவடியிலும் வாக்களிக்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு !!

ஜனாதிபதித் தேர்தலில், வாக்களிக்க தகுதி உடையவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாமல் போனால் ஏனைய வாக்களிப்பு நிலையங்களின் ஊடாக தமது வாக்கை செலுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்களிக்க தகுதியானவர்கள், தெரிவு செய்யப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாமல் போனால், அதற்கு பதிலாக மாற்று வாக்குச் சாவடியில் வாக்கை செலுத்துவதை அனுமதிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த செயல்முறையை எளிதாக்க, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் காரியலையங்களிலும் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும் என்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஓகஸ்ட் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு கிராம சேவகரின் உறுதிப்படுத்தல் கடிதம் அவசியம் என்றும் இந்தச் சான்றிதழ் இல்லாத விண்ணப்பங்கள் செல்லுபடியாகாது என்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட செயலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் உள்ள 2024 தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து தகவல்களை எடுத்து இதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.