உணவுக்கு தேவையான் எண்ணெய் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் – சர்வதேச நிபுணர்கள் பரிந்துரை !!

உணவுக்கு தேவையான் எண்ணெய் மூலம் இலங்கை நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என சர்வதேச நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இலங்கையில் பாம் ஒயில் இறக்குமதியில் கோடிக்கணக்கான பணம் சூறையாடப்படுவதால், நாட்டின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

90 சதவீத உணவு பதப்படுத்தும் நிறுவனங்களும், பல்பொருள் அங்காடிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான உணவுப் பொருட்களும் பாம் ஒயிலில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

இதனால் பாம் ஒயிலுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இறக்குமதி மாற்றீட்டைத் தாண்டி வர்த்தகப் பற்றாக்குறையைக் கருத்தில் கொள்வது அவசியம் என வலியறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டை நாடுகளின் சந்தைகள் குறிப்பிடத்தக்க வர்த்தக வாய்ப்புகள் ஏற்படும் என கூறப்படுகின்றது.

இந்தோனேஷியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகியவை பாமாயில் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன, இது உலகளாவிய உற்பத்தியில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

இந்தத் தொழில் சிறு விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்திற்கு மட்டுமல்லாமல் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

இதேநேரம் பாமாயில் இறக்குமதி கட்டணத்தை குறைக்க அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1 மில்லியன் ஹெக்டேரில் பாமாயில் பயிரிட இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது ஆண்டுக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர் என்றும் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *