இலங்கையில் உள்ள ஏழு முன்னணி பாடசாலைகளின் இணையத்தளங்கள் மீது இணைய ஊடுருவல் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அறிவித்துள்ளது.
தமக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரமப்பித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அறிவித்துள்ளது.
சில இணையத்தளங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அறிவித்துள்ளது.
சைபர் தாக்குதலுக்கு உள்ளான பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.