ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் முழு அதிகாரமும் கடந்த 17 ஆம் திகதி முதல் கிடைத்துள்ள நிலையில் மாத இறுதிக்குள் திகதி அறிவிக்கப்படும் முன்ன முன்னதாக கூறியிருந்தார்.

தமது வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் போது சுப நேரங்கள், ஏனைய கலாசார மரபுகள் என்பவற்றை பல வேட்பாளர்கள் பின்பற்றப்படுவதாக ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த நீண்டகால மரபுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என்பதனால் வேட்புமனு கோரும்போது இதுபோன்ற காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என கூறினார்.

ஜூலை 17 ஆம் திகதி தேர்தலை அறிவிக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ள போதிலும், செப்டெம்பர் 17  ஆம் திகதிக்கு பின்னர் போயாதினம் வருவதால் தேர்தலை நடத்துவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்தார்.

இருப்பினும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கு பொருத்தமான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறினார்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்கு முதல் முறையாக வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி முறையிலும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சைகை மொழி மூலமம் வாக்கை செலுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளதக்க தெரிவித்துள்ளார்.

மேலும் உடல் ஊனமுற்றோர் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கான விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தலைவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *