ரணில் விக்ரமசிங்கவிற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி

பொருளாதார யுத்தத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கேட்டுக்கொண்டுள்ளார்.

“நாட்டில் நிலைமை முன்னர் எதிர்பார்த்ததை விட மோசமாக இருந்தது. இறுதியில் தற்போதைய நிலையில் நாட்டைக் பொறுப்பேற்க முடியாது என அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க நிபந்தனைகள் விதிக்கவில்லை. நான் நிதியமைச்சராகப் பணியாற்றியபோது அவர் ஆலோசனைகளையும் வழங்கினார்.

அவர் தன்னைப் பற்றி சிந்திக்கவில்லை. அவர் இந்த நாட்டின் நிலைமையைப் பற்றி மட்டுமே சிந்தித்தார். அதன்படி இன்று பொருளாதார பொறிமுறை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அது வெற்றியடைந்துள்ளது. அதன் பிரதிபலன்களைக் கண்டுகொள்ள முடிந்துள்ளன. ஆனால் இது தொடர்பான விமர்சனங்களைத் தவிர மாற்றுக் கருத்தை முன்வைக்க யாரும் முன்வருவதில்லை.

ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள பொருளாதார அடித்தளம் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க  முடியாது. எனவே அனைவரும் இத்திட்டத்திற்கு ஆதரவளித்து நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணைந்துகொள்ளுங்கள்”