காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 21 ஆயிரம் சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக சேவ் த சில்ட்ரன் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல்போன சிறுவர்களை கண்டு பிடிக்கும் வகையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
காஸா மீதான தாக்குதல்கள் தொடங்கியது முதல் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 52 வீதமானவர்கள் பெண்களும் சிறுவர்களும் ஆவர்.
மேலும் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இன்னமும் கட்டிட சிதைவுகளுக்குள் சிக்குண்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் யுத்த நிறுத்தம் தொடர்பான எந்த இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில் மோதல்களும் உயிர் இழப்புக்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.