நாட்டில் மூன்று தசாப்தமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி லண்டனில் உள்ள தமிழர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணியில் கலந்து கொண்ட தமிழர்கள், பிரித்தானிய பிரதமரின் இல்லமான டவுனிங் வீதியை நோக்கி பேரணியாக சென்றனர்.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது புலம்பெயர் தமிழர்கள் பலர் இதில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.