ஜனாதிபதித் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது !!
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் விதிகளின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வேட்பு மனுக்கள் கோரப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்போதைய தேர்தல் சட்டதிற்கு அமைவாகவே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க முன்னதாக தெரிவித்திருந்தார்.
மேலும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்குமான செலவீனங்களுக்காக 10 பில்லியன் ரூபாய ஒதுக்கப்பட்டது.
இருப்பினும் இரண்டு தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்றும் இரு தேர்தலுக்கும் இந்த நிதி போதாது என்றும் முன்னதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இதேநேரம் 2024ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் கடந்த 6 ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.