முன்னாள் போராளியை வெலிக்கடைக்கு சுமேரு பார்வையிட்ட ஸ்ரீதரன், கஜேந்திரன் எம்.பி.

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனும், செல்வராசா கஜேந்திரனும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட  முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணனையும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆனந்தவர்ணன், தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பொய்க் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் தனது கருத்துகளைக் கூறுவதற்கான வாய்ப்பு கூட வழங்காமல் அடுத்த வழக்குத் தவணை எப்போது என்று கூடத் தெரியாத நிலையில் தன்னை தடுத்து வைத்துள்ளதாக ஆனந்தவர்ணன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய போது கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் என்பவரும் தனது விடுதலைக்காக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்ததாக சிறிதரன் தெரிவித்துள்ளார்.