இலங்கையில் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு – கனடா

இலங்கையில் பொருளாதார ஸ்திரப்படுத்தும் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக கனடா உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிற்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் நிதியமைச்சில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டத்திற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் இலங்கையில் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் முன்னேற்றம், நாட்டின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் வேலைத்திட்டம் குறித்தும் விரிவாக கலந்துரையாடியதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.