சர்வதேச பூமி தினம் இன்று
சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22 ஆம் திகதி சர்வதேச பூமி தினமாக கடைபிடிக்கப்படுகின்றது.
1970 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலாக கொண்டாடப்பட்ட சர்வதேச பூமி தினம் இம்முறை பூமியும் பிளாஸ்டிக்கும் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது.
மனிதனுக்கும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் ஆகும்.
பூமியானது உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாது ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து வருகிறது.
சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் இருந்தாலும் எந்த கோளுக்கும் இல்லாத உயிர்கள் வாழக்கூடிய தனி சிறப்பு, பூமிக்கு மட்டுமே உண்டு.