2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 5.1 வீதமாக இருந்த இலங்கையில் மொத்த பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 2.5% வீதமாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் உணவு பணவீக்கம் மாறாமல் தொடர்ந்தும் 5 வீதமாக இருப்பதாகவும் இது கடந்த பெப்ரவரி மாதம் 5.1 விதமாக இருந்தது என்றும் அறிக்கைகள் காட்டுகின்றன.
இதற்கு வீடு, நீர், மின்சாரம், எரிவாயு, எரிபொருள்கள், ஆடைகள், பாதணிகள் ஆகிய பொருட்களின் விலைக் குறைவே முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், மதுபானங்கள், புகையிலை, போதைப் பொருட்கள், உணவகங்களின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.