விஜயதாச ராஜபக்சவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஜயதாச ராஜபக்சவின் பெயரையும் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 20ஆவது அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (21) காலை நடைபெற்றது.
இதன்போது நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவும் கலந்து கொண்ட நிலையில் அவரை கட்சியின் பதில் தலைவராக நியமிக்க ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.