கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் குறித்து இலங்கை – அமெரிக்கா விவாதம் !!

அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத்துடன் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம், வரி நிர்வாகம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நிதி நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையிலும் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் உறுதியளித்ததாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார மீட்சி, நிதித்துறை ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இலங்கை செய்துவரும் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *