உலகளாவிய இறைமைக் கடன் வட்டமேசை மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் கலந்துகொண்டனர்.
சர்வதேச நாணய நிதியத்தினதும், உலக வங்கி, ஜி20 தலைமையிலான இந்த கூட்டு முயற்சியானது கடன் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க நாடுகளுக்கு உதவும் என நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்ற பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவையம் சந்தித்து கலந்துரையாடியதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.