பகிடிவதையை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் !!

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பிக்க உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வெசாக் பண்டிகை காலத்தில் அன்பு மாதம் என்ற தொனிப்பொருளில் பகிடிவதை எதிர்ப்பு வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்க உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சுமார் 85 வீதத்தால் குறைந்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

தண்டனைகளை அதிகரிப்பதோடு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பகிடிவதையை குறைக்க முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.