ரஷ்ய இராணுவத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் உட்பட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
61 வயதுடைய மற்றும் 63 வயதுடைய இருவரே இராஜவெல்ல, வாரியபொலவில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாடுகளுக்கு அமைய இவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றும் இலங்கை கூலிப்படையினரின் எண்ணிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் ரஷ்ய அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
உக்ரேனுக்கு எதிரான போரில் தற்போது 100 இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேவையாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள மொழி பேசுமபவர்கள், இராணுவ உடைகளை அணிந்து, போரின் முன்னணியில் பணியாற்றும் வீடியோ காட்சிகள் கடந்த மாதம் வெளியாகியிருந்தன.
இராஜதந்திர மோதல்கள் குறித்த அச்சம் காரணமாக, இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்துடன் அரசாங்கம் இதுவரையில் இது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.