நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாயாக அதிகரிக்க கோரி கொழும்பில் போராட்டம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாயாக அதிகரிக்க கோரி கொழும்பில் இன்று பாரிய போராட்டம் ஒன்று நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
தலையில் கருப்புப்பட்டி அணிந்தும் உழைக்கும் மக்களின் இரத்தத்தை உரிஞ்சாதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை முதலாளிமார் சம்மேளனம் புறக்கணித்த நிலையில் அதனைக் கண்டித்துமே இந்தப் போராட்டம் நடைபெறறது.