இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பக்டெட், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது பிரான்ஸ் நிறுவனங்களின் ஒத்துழைப்பு, முதலீட்டிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
அதன்படி ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திஸ்ஸ விக்கிரமசிங்கவை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார்.
மேலும் இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரான்ஸ் தூதுவருடன் பிரதி பொருளாதார ஆலோசகர் ஹேமா ராமச்சந்திரனும் கலந்துகொண்டார்.
(சமூக ஊடகங்களில் சிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)