சி.ஐ.டியினர் விடுத்த அழைப்பாணைக்கு இணங்க, இன்று காலை 10 மணிக்கு அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக வாக்கு மூலத்தைப் பதிவு செய்யவே சி.ஐ.டி அவருக்கு அழைப்பு விடுத்தது.
அரச புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலி சி.ஐ.டி.யில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் 2021 ஆண்டும் சிறில் காமினி பெர்னாண்டோவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது தான் கைது செய்யப்படக்கூடும் என்பதை அறிந்து அப்போது நீதிமன்றத்தின் ஊடாக, கைதுக்கு எதிரான தடை உத்தரவையும் பெற்றிருந்தார்.