தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நிறை நினைவுதினம் !

தமிழ் இனத்தின் தேசிய விடுதலைக்காகவும் இராணுவத்தின் அடாவடிகளுக்கு எதிராகவும் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீர்த்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நிறை நினைவுதினம் இன்றாகும்.

இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதி மட்டு மாமாங்கேஸ்வர ஆலய முன்றலில் 1988 ஆம் ஆண்டு போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந்தியப் படைகள் உடனடியாகப் போரை நிறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

தமது நோக்கை அடையும்வரை தளரமாட்டோம் என்ற வார்த்தைகளோடு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி இதேபோன்ற ஒருநாளில் காலமானார்.

இந்நிலையில் யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.