விசாகளை பெற்றுக்கொள்ள இன்றிலிருந்து புதிய நடைமுறை !!

விசாகளை பெற்றுக்கொள்வதற்கான புதிய முறை இன்றிலிருந்து அமுலாகும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய முறையின்படி, விசா வழங்குவதற்கான கட்டணங்கள், தேவையான வசதிகள், நாட்டில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை குறித்த முழுமையான அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் இலகுவாக விசாவை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரித்து இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை, வணிக நோக்கம், டிரான்ஸிட் விசாக்களுக்கான கால அளவு மற்றும் கட்டணங்கள் குறித்த தெளிவுபடுதலையும் வெளியிட்டுள்ளது.