நாட்டில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமானால் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் நிலைக்காது என்பதை சர்வதேச கடன் வழங்குநர்கள் அறிந்துள்ளதாகவும் அதனாலேயே கடன் மறுசீரமைப்பு பணிகள் தாமதமடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து நாடுகளுடனும் இலங்கை நல்ல இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.