தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் நிறுவனங்களினதும் தொழிற்சங்கங்களினதும் கருத்துக்கள் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நுவரெலியா உடபுசெல்லாவ பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான லொட்ஜ் தோட்டத்திற்கு விஜயம் செய்த போது மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இயற்கை எழில் சூழ்ந்த நுவரெலியாவில் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக நடவடிக்கைகளை ஆராயும் வகையில் ஜனாதிபதி இந்த கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள், கல்வி, சுகாதாரம், வீடமைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆராய்ந்தார்.
கிராமப்புற சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதேவேளை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய திட்டங்களை நுவரெலியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.