மின்சாரம் தாக்கி ஐ.தே.க. உறுப்பினர் உயிரிழப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும இன்று (16) காலமானார்.

1960 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பிறந்த பாலித தெவரப்பெருமவு 64 ஆவது வயதில் இன்று காலமானார்.

வீட்டில் மின்சாரம் தாக்கியதால் அவர் உயிரிழந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எமக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவரது சடலம் அங்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்/

2010 ஆம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான இவர், நல்லாட்சி அரசாங்கத்தில் 2016 ஏப்ரல் 6 முதல் 2018 மே 1 வரை உள்நாட்டு அலுவல்கள், வயம்ப அபிவிருத்தி பிரதி அமைச்சராக பணியாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *