போதைப்பொருள் பாவனைக்காக திருட்டு – யாழில் இளைஞர் கைது !!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

குருநகர் பகுதியில் கடந்த வாரம் இரு வேறு இடங்களில் 90 ஆயிரம் ரூபாய் பணத்தையும், ஐந்தரைப் பவுண் பெறுமதியான நகையையும் திருடிய குற்றச்சாட்டிலையே அவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் பாவனைக்காகவே தான் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்தமையை விசாரணையின் போது தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, நகை மற்றும் பணம் என்பனவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.