யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் தாயையும் மக்களையும் வீடுபுகுந்து தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு , பணிப்புலம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சமபவத்தில் காயமடைந்த தாயும் மகளும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காதல் முரண்பாடே இந்த தாக்குதலுக்கு காரணம் என்றும் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திய 37 வயதான இளைஞன் காணியொன்றில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.