இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடரில் ஆஸ்டன் வில்லா அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் அடைந்த தோல்வியின் காரணமாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடரை வெல்லும் ஆர்சனல் அணியின் எதிர்பார்ப்பு தகர்ந்துள்ளது.
நேற்று நடைபெற்ற இப்போட்டியில் லியோன் பெய்லியும் ஒல்லி வாட்கின்சும் அடித்த கோல்கள் ஆஸ்டன் வில்லா அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
கடந்த 12 போட்டிகளில் ஆர்சனல் அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இந்த தோல்வியால் ஏமாற்றமடைந்த ஆர்சனல் அணியின் ரசிகர்கள் விளையாட்டரங்கை விட்டு வெளியேறினர்.
இந்தத் தோல்வியின் மூலம் ஆர்சனல் அணி மான்செஸ்டர் சிட்டியைவிட இரண்டு புள்ளிகள் குறைந்த நிலையில் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதேநேரம் மற்றோரு தோல்வியைச் சந்தித்த லிவர்பூல் அணி இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடரில் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இன்னும் ஆறு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் மான்செஸ்டர் சிட்டி அணி 73 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.