வொஷிங்டன் DC இல் ஐ.எம்.எப். உலக வங்கியின் வசந்த கூட்டம் !!

சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இன்று நடைபெறுகின்றது. அடுத்த தவணை நிதியை பெறுவதற்கும், கடன் மறுசீரமைப்பை விரைவில் முடிப்பதற்கும் இதன்போது பயனுள்ள வகையில் விவாதத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

மாறிவரும் உலகளாவிய பொருளாதார, அரசியல் சூழலால் ஏற்படும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் அதனை நோக்கிய பயணத்தில் எழும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளோடு இணைந்து செயற்படுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் கீழ், பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், ஒவ்வொரு இலங்கைப் பிரஜைகளின் பொருளாதாரத்தையும் நலனையையும் மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு முயற்சிகள் மூலம் இலங்கை பிரகாசமான பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும் என்பதே அரசாங்கத்தின் நம்பிக்கை என்றும் இன்று ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் மத்திய ஆண்டு மாநாட்டின் மூலம் இது சாத்தியமாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.