இலங்கையின் கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தனக்கு தெரியும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும் என இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் விடயத்திலும் கச்சத்தீவு விவகாரத்திலும் தி.மு.க. அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதாகவும் அதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கச்சத்தீவு விடயத்தில் என்ன செய்வோம் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் என்ன செய்வது என்று தனக்குத் தெரியும் என்றும் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
1970 ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்ட விவகாரம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் ஜெய்சங்கர் இதனை குறிப்பிட்டுள்ளார்.