இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சட்டவிரோதமான அணுகல் அல்லது வினாத்தாள்களை சேதப்படுத்துவதைத் தடுப்பதற்கு மேலதிக கண்காணிப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
வினாத்தாள்களை எடுத்துச் செல்லும்போதும், அதனை வழங்கும் போதும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேநேரம் மறுபரிசீலனை நடவடிக்கைகள் முடிவடைந்ததும் உயர்தர பரீட்சை முடிவுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.