சிட்னியில் உள்ள தேவாலயத்தில் பிஷப் கத்தியால் குத்தப்பட்டார்..!!

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் தேவாலய ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது அருட்தந்தை உள்ளிட்டவர்கள் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆராதனையின் போது அருட்தந்தை மீது அடையாளம் தெரியாத ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த கத்திக் குத்து தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என்றும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேருக்கும் உயிராபத்து இல்லை என்றும் அவர்கள் தொடந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சிட்னியில் உள்ள பல்பொருள் அங்கடியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *