மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் கடும் மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எனவே கம்பியில் இணைக்கப்பட்ட தொலைபேசிகள், மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் திறந்தவெளியிலும் மரங்களுக்கு கீழ் நிற்பதையும் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.