பட்டாசு கொளுத்தும் போது அவதானம் – 17 விகிதமானவர்களுக்கு கண் பார்வை பிரச்சினை ஏற்படுகின்றது

பண்டிகைக் காலங்களில் பட்டாசு கொளுத்தும் போது அதனால் ஏற்படும் விபத்துகளை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் மாத்திரம் 36 விகிதமான விபத்துகள் பதிவாவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதால் 17 விகிதமானவர்கள் கண் பாதிப்பிறகு உள்ளாவதாகவும் ஆய்வு அறிக்கைகள் காட்டுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே பெரியவர்களின் மேற்பார்வையின்றி சிறுவர்கள் பட்டாசு வெடிக்க அனுமதியில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.